மரணத்திற்குப் பின்
மரணத்திற்கு பிறகு , குழந்தைகள் மற்றும் சன்னியாசிகளைத் தவிர மற்றவர்களை எரியூட்டுவதே இந்து மதத்தவர் பழ்க்கமாகும். ப ஞ்ச பூதங்களாலான உடலை அவற்றிற்க்கே அளித்துவிட்டு, ஆன்மாவை அதன் உலகுக்கு அனுப்புவதே இதன் நோக்கமாகும்.குடும்பத்தவர் யாரேனும் இறந்துவிட்டால் , அந்த குடும்பத்தை சார்ந்த அத்தனை பேரும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். அவர்கள் இல்லங்களில் அந்த காலத்தில் எவ்விதப் பண்டிகையும் கொண்டாடப்படக்கூடாது. இறந்தவரின் வாரிசுகள் வேதங்களில் சொல்லிய வண்ணம் இறந்தவற்கான கர்ம காரியங்களை தவறாது செய்து வரவேண்டும்.
இந்து மதம் இறப்பை ஒரு பெரிய நிகழ்வாக கருதுவதில்லை.உடல் மட்டுமே அழியக்கூடியது, ஆன்மா அழிவற்றது என்பதை திடமாக நம்பும் இந்து மதம், முக்தி அடையாத ஆன்மாவிற்கு மறு பிறவி நிச்சயம் உண்டு என்று சொல்கிறது.எனவே முக்தி பெறாத ஆன்மாக்களுக்கு இறப்பிற்கு முன்னரும், பின்னருமான வாழ்க்கை தற்காலிகமானதே என்று கருதுகிறது.இறக்கும் வரையில் இந்த உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு இந்த உலக வாழ்க்கை எப்படி தற்காலிகமானதோ அதை போலவே இறந்த பின்னர் மறு பிறவியினை எதிர் நோக்கி இருக்கும் ஆன்மாவிற்கு அவ்வாழ்க்கையும் தற்காலிகமானதே.
பகவத் கீதை இறப்பிற்கு பின்னர் ஆன்மாவிற்கு இரு வழிகள் உண்டு. ஒன்று சூரிய வழி, மற்றொன்று சந்திர வழி. சூரிய வழியில் செல்லும் ஆன்மாக்களுக்கு மறு பிறவி இல்லை . சந்திர வழி செல்லும் ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுக்கின்றன. சூரிய வழியினை மேல் வழி எனவும் சந்திர வழியினை கீழ் வழியெனவும் குறிப்பிடப்படுகிறது.ஒருவன் ஒரு பிறவியில் செய்யும் வினைகளுக்கு ஏற்பவே அவன் மேல் வழிக்கோ கீழ் வழிக்கோ அனுப்பப்படுகிறான். ஒருவன் இறக்கும்போது எதனை நினைத்து கொண்டு இறக்கிறானோ அதனையே அவன் அடைகிறான் என இந்து மதம் எடுத்து காட்டுகிறது. தனது குடும்பத்தியே சதா சர்வ காலமமும் நினைத்து கொண்டிருந்து இறப்பவன் தனது மறு பிறவியில் அதே குடும்பத்தை அடைகிறான். இறைவனை த்யானித்து உயிர் விடுபவன் அவன் தவறுகளெல்லாம் மன்னிக்கப்பட்டு முக்தி அடைகிறான். புனித நாட்களில் உயிர் விடுபவன் சொர்க்கத்தை அடைகிறான்.
" இறைவனை நினைத்து ஓம் என்னும் மந்திரத்தை த்யானித்து, ஐம்புலங்களையும் கட்டுபடுத்தி, சுவாசத்தை உள் நிறுத்தி, யோகம் பயில்பவர்கள் சூரிய வழியை அடைகிறார்கள்" பகவத் கீதை(8.12-13)
இவ்வாறு உடலைவிட்டு நீங்கும் ஆன்மா அதனுடைய அடுத்த கட்டத்தை தாமதமின்றிஅடைய இறந்தவரின் வாரிசுகள் அவருக்குண்டான கர்ம காரியங்களை சரியாக செய்யவேண்டும். இவை யாவும் இந்துக்களால் ஏற்று கொள்ளப்பட்ட நம்பிகைகள் எனினும், ரிக் வேதத்தில் மறு பிறவி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
முக்தி அடையும் ஆன்மா இறைவனை அடைகிறது. அதற்கு மறு பிறவி இல்லை. ஆன்மா இறைவனை அடையும் இடத்தை சைவம் கைலாசம் எனவும், வைஷ்ணவம் வைகுந்தம் எனவும், ப்ரம்மவை வண்ங்குபவர்கள் ப்ரம்ம லோகமெனவும் குறிப்பிடுவார்கள். யமலோகம் என குறிப்பிடப்படுவதே நரகமாகும். இந்துக்களை பொறுத்தவரை சொர்க்கமும் , நரகமும், முக்தி பெறாத ஆன்மாக்களின் தற்காலிக உலகங்கள் ஆகும். உடலில் இருந்து பிரிந்த ஆன்மா அதனடுய வினைகளுக்கேற்ப சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பபடுகிறது. ஆனால் உடலற்ற ஆன்மா சொர்க்கத்தின் மேன்மைகளையோ நரகத்தின் கொடுமைகளையோ அனுபவிப்பதில்லை. அவற்றை உணர மட்டுமே செய்கின்றன.
இந்த உணர்வுகளுடன் மறு பிறவியெடுக்கும் ஆன்மாக்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களின் காரணமாக நல் வழியில் நடந்து முக்தி பெற முயற்சிகின்றன. மாயையால் மறைக்கப்படும் ஆன்மாக்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் மறந்து போய் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அல்லலுறுகின்றன. உடலிலிருந்து நீங்கும் உயரிய ஆன்மாக்கள் தங்கள் உலகை அடையும் வரை ஆவிகளாகவும்,பாவாத்மாக்கள் பேய்களாகவும் திரிகின்றனர்.இவையெல்லாம் வேத காலத்திற்கு பிறகு ஏற்பட்ட நம்பிக்கைகளே எனவும் சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக