வெள்ளி, 2 ஜனவரி, 2015

திருப்பாவை 19.






குத்து விளக்குஎரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா, வாய் திறவாய்
மைத்தடங்கண் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய்காண்
எத்தனை ஏலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேல் ஓர் எம்பாவாய்

பொருள்:
குத்துவிளக்கி எரிந்து கொண்டிருக்க, யானையின் தந்தத்தால் ஆன கட்டிலின் மேலே மெத்தென்ற பஞ்சு மெத்தை போல பூங்குழல் கொண்ட நப்பின்னை கண்ணயர்ந்து கிடக்க, அவரது மார்பின் மீது தலை வைத்துப் படுத்துறங்கும் நாராயணமூர்த்தியே, உன்னுடைய வாய் திறந்து ஒரு வார்த்தை பேசு. உனது குரலைக் கேட்க காத்திருக்கிறோம். மை தீட்டிய கண்களை உடைய நப்பின்னையே, நீ உன் மணாளனை ஒரு கணமும் பிரிந்திருக்க மாட்டாய். அவன் விழித்தெழவும் நீ அனுமதிக்க மாட்டாய். நீ இப்படி இருப்பது தகுமா.

திருவெம்பாவை 19



 உங்கையில் பிள்ளைஉனக்கே அடைக்கலம் என்று
 அங்(கு) அப்பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்குஒன்று உரைப்போம்கேள்
எம்கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எம்கண் மற்றொன்றும் காணற்க
இங்குஇப் பரிசே எமக்குஎங் கோன் நல்குதியேல்
எங்குஎழில் என்ஞாயிறு எமக்குஏல் ஓர் எம்பாவாய்

பொருள்:
எம் தலைவனே, உனக்கு ஒரு விண்ணப்பம் செய்கிறோம்.கேள். நாங்கள் உன் அன்பரல்லாதாரோடு இணையக் கூடாது, உன்னைத் தவிர வேறு யார்க்கும் தொண்டு செய்யக் கூடாது. எங்களது கண்கள் இரவும், பகலும் உன்னை மட்டுமே காண வேண்டும். இவ்வுலகில் இவ்வாறே எங்களுக்கு நீ அருள வேண்டும். அப்படிச் செய்தால் சூரியன் கிழக்கைத் தவிர வேறு திசையில் உதித்தால்தான் என்ன, எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக