மனத் துயர் நீக்கும் பாசுரம்
சைவர்களுக்கு தேவாரம் திருவாசகம் போன்றதே வைணவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம். இறையருள் பெற்ற ஆழ்வார்களால் பாடப் பெர்ற இப்பாசுரங்கள் அளப்பறிய சக்தியுடையவை. பெரியதிருமொழி பத்தாம் பத்தில் எட்டாவதாக அமையப்பெற்ற இப்பாசுரத்தை தொடர்ந்து ஓதி வருபவர்கள் மன அமைதியையும் வாழ்வில் நிம்மதியையும் பெறுவார்கள் என்பது திண்ணம்..
காதிலே கடுப்பிட்டு கலிங்கம் உடுத்து
தாதுநல்ல தன்ணந் துழாய் கொடணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு இதுவென் இதுவென் இதுவென்னோ
துவராடை உடுத்து ஒருசெண்டு சிலுப்பி
கவராக முடித்து கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர்
இவரார் இதுவென் இதுவென் இதுவென்னோ
கருகக் கொடி ஒன்றுடையீர் தனிப்பாகீர்
உருளச் சகடம் அது உறக்கில் நிமிர்ந்தீர்
மருளைக் கொடுபாடி வந்துஇல்லம் புகுந்தீர்
இருளத்து இதுவென் இதுவென் இதுவென்னோ
நாமம் பலவும் உடை நாரணன் நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமெனனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இதுவென் இதுவென் இதுவென்னோ
சுற்றும் குழல்தாழச் சரிகை அணைந்து
மற்றும் பல மாமணி பொன்கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இதுவென் இதுவென் இதுவென்னோ
ஆனாயரும் ஆனிரையும் அங்கொழியக்
கூனாயதோர் கொற்ற வில்லொன்று கையேந்திப்
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்
ஏனோர்கள் முன்னென் இதுவென் இதுவென்னோ
மல்லே பொருத திரள்தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை
சொல்லாது ஒழியிர் சொன்னபோதினால் வாரீர்
எல்லே இதுவென் இதுவென் இதுவென்னோ
புக்காடரவம் பிடித்தாட்டும் புனிதீர்
இக்காலங்கள் உமக்கு யாம் ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்
எக்கே இதுவென் இதுவென் இதுவென்னோ
ஆடி அசைந்து ஆய்மடவாரோடு நீ போய்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திருமாமகள் மண்மகள் நிற்ப
ஏடி இதுவென் இதுவென் இதுவென்னோ
அல்லிக் கமலக் கன்ணனை அங்கு ஓராய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தை
கல்லின் மலிதோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கம் இலரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக