கல்வி மேம்பட உதவும் பாசுரம்
நம்மாழ்வார் என பக்தர்களால் அழைக்கப்படும் சடகோபரால் அருளப்பட்ட இவ்வற்புதப் பாசுர பாராயணம் கல்வியில் சிறந்து விளங்க அருள் செய்யும் என்பது அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும். நம்மாழ்வார் இறையருளால் பாடிய பாசுரம் அன்றோ?
பெருமாள் நீள் படையாழி சங்கத்தோடு
திருமால் நீள் கழல் ஏழுலகம் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கமென் கண்ணுளதாமே
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
என்னிலும் வருமென்னினி வேண்டுவம்
மண்ணும் நீரு மெரியும் நல்வாயுவும்
விண்ணுமாய் விரியு மெம்பிரானையே
எம்பிரானையெந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை தன் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனியென்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும்போதும் விடாது தொடர்க் கண்டாய்
கண்டாயே நெஞ்சமே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகமேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே
நீயும் நானுமிந் நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்க்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமா யிவ்வுலகினில்
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே
எந்தையென்று மெம்பெருமானென்று
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தையெம்பெருமானென்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே
செல்வ நாரணனென்ற சொல்கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும்நன் பகலு மிடைவீடின்றி
நல்கியென்னை விடான்நம்பி நம்பியே
நம்பியைத்தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனேத் திகழும் திருமூர்த்தியை
உம்பர்வானவ ராதியஞ்சோதியை
எம்பிரானை யென் சொல்லி மறப்பனோ
மறப்பும் ஞானமும் நானொன்று ணர்ந்திலேன்
மறக்குமென்று செந்தாமரைக் கண்ணொடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை
மறப்பனோவினி யானென்மணியையே
மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர்
அணியை தென்குரு கூர்ச்சடகோபன் சொல்
பணிசெயாயிரத் துல்ளி வைபத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக